Source
https://www.ndtv.com/business/tamil/selva-magal-thittam-how-to-invest-1860913
https://www.ndtv.com/business/tamil/selva-magal-thittam-how-to-invest-1860913
10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கை துவங்க முடியும்
அரசு பெண் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கு, திருமணம் ஆகாத பெண்களுக்கென பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு என "செல்வ மகள் திட்டத்தை" அறிமுகம் படுத்தியுள்ளது நம்மில் பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும் அதில் எப்படி முதலீடு செய்வது என்ற குழப்பம் இருக்கும். இத்திட்டத்தை பற்றி உங்களுக்கு விளக்குகிறது இக்கட்டுரை
செல்வ மகள் திட்டம் என்றால் என்ன?
பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட திட்டம் இது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது அவர்களின் உரிமையாளர்கள் அஞ்சலகத்தில் குணிந்தபட்சம் ரூ.1000 முன்பதிவு செய்து கணக்கை துவங்கலாம். வருடாவருடம் 8.5% வட்டித்தொகை இக்கணக்கில் இணைந்துக் கொண்டே வரும். பெண் பிள்ளைகள் 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுது 50% பணத்தை எடுத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது 18 வயதுக்கு பின் எடுத்துக் கொள்ளலாம்.குறைந்தது ஓராண்டிற்கு ரூ.1000 நிதி தொகையை செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
1.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கை துவங்க முடியும்
2.ஒரு வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு இக்கணக்கை துவங்கலாம்
3. வருடாவருடம் குறைந்தது ரூ.1000 முதிலீடு செய்ய வேண்டும்; அதிகபட்சமாக 1.5லட்ச முதலீடு செய்யலாம்
4.அருகில் இருக்கும் எந்த அலுவுலகத்திலும் இக்கணக்கை துவங்கலாம்
5.வருடம் 8.5% வட்டித் தொகை கணக்கில் இணையும்
6. பதிவு செய்ததில் இருந்து 15 வருடம் வரை கணக்கை இயக்கலாம்
7. 10ஆம் வகுப்பு படிக்கும் பொழுதோ அல்லது 18 வயதுக்கு பின்னரோ கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம்
8. திருமணம் ஆவதற்கு ஒரு மாதம் முன்பாக திருமண செலவுக்குமொத்த பணத்தை எடுத்துவிட்டு கணக்கை மூடலாம்
9. முறையாக சொன்னா தொகை செலுத்தபடவில்லை என்றால் வெறும் 4% வட்டி மட்டுமே பெற முடியும்.
10. இந்த சேமிப்பு திடத்திற்கு வரிவிலக்கு உண்டு
11.கணக்கை பாதியில் விட்டால் ரூ.50 செலுத்தி மீண்டும் தொடரலாம்.
12. 21 வயது நிறைவடைந்த உடன் கணக்கு முதிர்வடைந்து விடும், அதன் பின் வட்டி கணக்கில் இணையாது
இந்த அரசு திட்டம் பெண் குழந்தைகளுக்கு சாதகமாகவே இருக்கிறது; இந்த
முதலீட்டில் எந்த வித ரிஸ்கும் இல்லை. அதனால் பெற்றோர்கள் தைரியமாக இதில்
உங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்யலாம். மேலும் விவரங்கள் மற்றும்
கணக்கை தொடர உங்கள் அருகில் இருக்கு அஞ்சலகத்திற்கு செல்லுங்கள்.
No comments:
Post a Comment