Monday, July 13, 2020

வீட்டில் இருக்கும் தங்கத்தை வங்கியில் வைத்து பாதுகாத்தால் வட்டி கிடைக்கும்! தெரியுமா?


 

நீங்கள் பாதுகாக்கும் நகைக்கு வங்கி நிர்வாக குறிப்பிட்ட தொகையில் உங்களுக்கு வட்டி

 

SBI Gold Deposit Scheme : தங்கத்தின் மீது ஆசை இல்லை என்று யார் கூறினாலும் அதை அவ்வளவு எளிதாக நம்பி விட முடியாது. காரணம் தங்கத்துக்கு இப்போது இருக்கும் மவுசு தான். மனிஷங்களை விட தங்கத்திற்கு தான் இப்போது கூடுதல் வெல்யூ.

மரியாதை, கவுரவம் என தங்கத்திற்கு ஏகப்பட்ட விளக்கங்களை கொடுக்கிறார்கள். இன்றைய சூழலில் தங்கம் விற்கும் விலையை பார்த்தாலே தலை சுற்றிவிடுகிறது. சின்ன குண்டு மணி தங்கம் தொடங்கி ஆபரணங்கள் வரை எங்கு வாங்குனாலும், விற்றாலும் தங்கத்தில் வேல்யூ ஏற்முகம் தான். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் தங்கத்தை பாதுகாப்பது பெரிய சவாலாக உள்ளது. வீட்டில் நிறைய தங்கங்களை வைத்திருப்பவர்கல் இரவில் நிம்மதியாக தூங்குவது இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இனி அந்த கவலைய வேண்டாம். வீட்டில் பாதுகாப்பாக இல்லை என்று நினைத்தால் வங்கியில் சென்று பத்திரமாக வையுங்கள். அதற்கு வட்டி கிடைக்கும். சூப்பர்ல! ஆம எஸ்பிஐ வங்கியில் இருக்கு அந்த ஸ்கீம் தான் Gold Deposit Scheme . நீங்கள் பாதுகாக்கும் நகைக்கு வங்கி நிர்வாக குறிப்பிட்ட தொகையில் உங்களுக்கு வட்டியை தருகிறது.

1. ரிவாம்ப்டு கோல்ட் டெபாசிட் ஸ்கீம்’ (R-GDS). இந்தியாவில் வசிப்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். என்.ஆர்.ஐ-களுக்கு அனுமதி இல்லை.

2. இதில் மூன்று வகை முதலீடுகள் உள்ளன.
குறுகிய கால முதலீடு (1-3 வருடங்கள்).
நடுத்தர கால முதலீடு (5 -7 ஆண்டுகள்). மத்திய அரசு சார்பாக முதலீடு வங்கியால் பெறப்படும்.
நீண்ட கால முதலீடு (12 – 15 ஆண்டுகள்). மத்திய அரசு சார்பாக முதலீடு வங்கியால் பெறப்படும்.

3. இதுப்போன்ற மற்ற 2 திட்டங்களிலும் வட்டிகள் உண்டு. முதலில் 1 லட்சம் மதிப்பிலான அதாவது 30 கிராம் தங்கத்தை முதலீடு செய்ய வேண்டும்.